16 May 2012

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-4

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-4

இடிதாங்கி எவ்விதத்தில் வேலை செய்கிறது? ஆகாயத்தில் உள்ள மேகங்களின் அடிப்பரப்பில் நேர்மின் (+) தோன்றுவதாக உதாரணத்துக்கு வைத்துக் கொள்வோம். அப்போது தரையில் எதர்மின் (-) தோன்றும். இந்த மின்னானது கூர்மையாக உள்ள பகுதிகளில் திரண்டு நிற்கும் தன்மையுடையது. கூர்மையான பகுதிகளில் காற்று துகள்கள் படும்போது அவற்றிலிருக்கிற மின்கள் கூர் முனை விளைவு என்ற முறையில் அடித்து செல்லப்பட்டு விடும். இதனால் தரையிலுள்ள் மின்னின் வீ¡¢யம் குறைந்து விடும். அப்படி மேலே போகிற மின், மேகத்திலுள்ள நேர்மின்னின் வீ¡¢யத்தையும் குறைத்துவிடும். இதனால் தான் இடிதாங்கிகளின் மேல்முனைகள் கூர்மையாக அமைக்கப்படுகின்றன. அதையும் மீறிய அளவில் மின்கள் தோன்றி இடி விழுகிற நிலை ஏற்பட்டால், இடியிலுள்ள மின்சாரம் சுலபமாகக் கடந்து செல்லக் கூடிய உலோகப் பொருள்களைத் தேடிப்பிடித்து இறங்கும். அதற்காக இடிதாங்கியில் ஒரு செப்புக் கம்பியை இணைத்துத் தரையில் புதைத்து விட்டால் இடி மின்சாரம் கட்டடத்துக்கு வெளிப்புறமாக உள்ள அந்தக் கம்பியின் வழியாகப் பாய்ந்து தரையிலிறங்கிவிடும். கட்டடத்துக்குச் சேதம் ஏற்படாது.

*************

மின்சாரக் கசிவு எதன் காரணமாக ஏற்படுகிறது? இதைத் தடுத்து விபத்திலிருந்து மீளுவது எப்படி? மின் கம்பிகளின் மேலுள்ள் இன்சுலேட்டர் சேதமடைந்து கம்பி ஏதாவது மின் கடத்துகிற பொருளின் மேல் படுவதால் மின் கசிவு ஏற்படும். இதைத் தடுக்க வேண்டுமானால் கையில் ஒரு டெஸ்டரை வைத்துக் கொண்டு சந்தேகப் படுகிற இடத்தையெல்லாம் தொட்டுப் பார்த்து அங்கங்கே இன்சுலேஷன் சா¢யாக உள்ளதா என்று சோதித்து விட வேண்டும்.

*************

குடிநீரை ஒரு சி்ரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் என்ன நிகழும்? குடிநீரை ஒரு சிரிஞ்சின் மூலம் உடலில் ஏற்றினால் நிகழ்வது நீ¡¢ன் தன்மையைப் பொருத்து உள்ளது. கொதிக்க வைக்கப்பட்ட, வடிகட்டப்பட்ட, சுத்தமான நீராக இருந்தால், இரத்தத்தில் கிரகிக்க்பட்டு சிறு நீ¡¢ல் வெளியேறி விடுகிறது. அசுத்தமான நீர் உட்செலுத்தப்பட்டால் சீழ்கட்டி உண்டாகும். பெரும்பாலான ஊசி மருந்துகள் நீ¡¢ல் கலக்கப்படடே கொடுக்கப்படுகின்றன.

*************

ஹெலிகாப்டர் அந்தரத்தில் ஒரே இடத்தில் குறிப்பிட்ட நேரம் நிலையபக நிற்கிறது இது எப்படி? அவ்வாறு நிற்பதற்கு ஹெலிகாப்டர் பெற்றுள்ள் தகவமைப்புகள் என்ன? ஹெலிகாப்டா¢ன் மேலே உள்ள விசிறி காற்கைக் குடையும் போது மேலே இழுக்கப்படுகிறது. திருகாணியைச் சுழற்றினால் அது மரத்துக்குள் போகிறதல்லவா? அதேபோல திருகு வடிவத்தில் காற்றைக் குடையும் படி அந்த விசிறிகள் அமைந்திருக்கும். விசிறிகள் மேலே தூக்கப்படும்போது ஹெலிகாப்டரும் மேலே உயர்த்தப்படும். ஆனால் இவ்வாறு மேலே உயர்த்துக்கிற விசை ஹெலிகாப்டா¢ன் எடைக்குச் சமமாக இருக்கும்போது ஹெலிகாப்டர் அந்தரத்தில் அசையாமல் நிற்கும். விசிறியோடு சேர்ந்து ஹெலிகாப்டரும் சுழலாமலிக்க அதன் வால்பகுதியில் ஒரு விசிறி எதிர்த்திசையில் சுழன்று கொண்டிருக்கும்.

*************

தாமரை இலையில் தண்ணீரை விட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ஒட்டவே ஒட்டாது. முத்து முத்தாகத் தண்ணீர் உருண்டு ஒடும். அது போலவே வாத்தின் முதுகிலும் நீர் ஒட்டாது.

*************

ஒட்டகம் போல் தண்ணீர் உணவு ஏதுமின்றி நீண்ட நாட்கள் வாழக் கூடிய இன்னொரு பிராணி எது தொ¢யுமா? காட்டு ஆடு.

*************

பறவைகளுக்கு வியர்வை சுரப்பிகளே கிடையாது.

யானையின் துதிக்கையிலே 40000 தசைகள் உண்டு. ஆனால் ஒர் எலும்புக் கூட கிடையாது.

*************

இரண்டு மனிதர்களை சுமந்து கொண்டு குதிரையைப் போல வேகமாக ஒடவல்ல சக்தி வாய்ந்தது, தீக்கோழி.

*************

உடம்பில் சிலருக்குத் திட்டுத் திட்டாக தேமல் முகம், உடம்பில் படரும். இதை நீக்க ஒரு புதிய மருந்து: ஹைபோ உப்பைச் சுடுநீ¡¢ல் கரைத்து ஒரு பஞ்சினால் தடவி வ்நதால் தேமல் மறைந்து விடும். ஹைபோ உப்பு என்பது பிலிம் நெகடிவ்களைக் கழுவ உதவும் ஒர் இரசாயனப் பொருள்.

*************

அதிக அளவில் ரப்பரை உற்பத்தி செய்து வரும் நாடு மலேசியா.

*************

நீரிலும் விண்ணிலும் நன்கு செயல்படக் கூடிய திறனுடைய விமானப்படகு இப்போது இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. யுத்த நேரங்களில் இது பெரிதும் உதவும் என்பதால் இங்கிலாந்திடம் இது பொ¢தும் உதவும் என்பதால் இஙகிலாந்திடம் ஒரு மில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்க பல நாடுகளும் வரிசையில் நிற்கின்றனவாம். உலகில் இத்தகைய இரகப்படகு இது ஒன்றுதான். இந்த படகின் பெயர் என்ன தெரியுமா? சுந்தர் லேண்ட்

*************

பூமியிலிருந்து பார்க்கும் பொழுது வாகனம் நீல நிறமாகத் தோன்றுகிறது. ஆனால் விண்வெளியில் வானம் கறுப்பாகத் தோன்ற காரணம் என்ன? பூமியின் மேல் உள்ள காற்றுமண்டல அடுக்குகளில் ஏற்படும் ஒளிச் சிதறலால் நீல நிறம் தெரிகிறது. விண்வெளியில் இவ்விளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை.

*************

நம் உடம்புக்கு சிறிதளவு அயோடின் என்ற இராசாயனப் பொருள் தேவைப்படுகிறது. இது உணவின் மூலம் கிடைக்காவிட்டால் காய்டர் கட்டிகள் உண்டாகின்றன. அயோடின் கடல்மீன், கடல் பாசிகளில் அதிகம் இருக்கிறது. மீன் மற்றும் கடல் உணவுகளில் அயோடின் இருப்பதால் இவற்றைச் சாப்பிடுகிறவர்களுக்கு காய்டர் கட்டிகள் உண்டாவதில்லை. கடற்கரைக் காற்றில் அயோடின் கலந்து வருவதால் காற்று வாங்கக் கடற்கரைக்குப் போகலாம்.

*************

உலகிலேயே பாராசூட் விளையாட்டுப் போட்டிகளில் அதிகம் ஈடுபடும் வீரர்கள் ரஷ்யாவில் தான் இருக்கிறார்கள். இந்த விளையாட்டில் செய்யப்பட்ட 63 உலக சாதனைகளுள் 50 சாதனைகளை ரஷ்ய வீரர்கள் தாம் செய்துள்ளனர். எவ்வளவு ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள இது சம்பந்தமான பயிற்சியில் பங்கு கொள்கின்றனர்.

*************

உலகிலேயே கென்யா நாட்டில் தான்அதிக அளவில் பிறப்பு விகிதம் அதிகமாகிறது. 1000 பேர்களுக்கு 55 குழந்தைகள் என்ற கணக்கில் குழந்தைகள் பிறப்பு விகிதம் உள்ளது. மிகப் பொ¢ய அளவில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள நாடு இது. பால் பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆப்பி¡¢க்க நாடுகளில் இதுவும் ஒன்று. பெரும்பாலும் எல்லோரும் விவசாயிகள். நன்கு உழைக்கக் கூடியவர்கள். அதனால் குழந்தைகளும் ஆரோக்கியமாகவே பிறக்கின்றன.

*************

ஆசியாவிலேயே மிகப் பெரிய காற்றாலை மின்சார நிலையம் இந்தியாவில் தான் உள்ளது. 10 மெகாவாட் மின்சாரம் தயா¡¢க்கும் திறனுடைய இந்த மின்சார நிலையம் குஜரத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்திலுள்ள லம்பா என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

*************

டெலஸ்கோப் எவ்விதம் செயல்படுகிறது? டெலஸ்கோப்பில் இரண்டு சமதள கண்ணாடிகள் ஒன்றுக்கொன்று இணையாக 4 சாய்வில் பொருத்தப்பட்டிருக்கும். மேலேயுள்ள பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள் முதல் ஆடியில் பட்டு ஆடி 45 சாய்வில் உள்ளது. 90 யில் பிரதிபலித்து கீழே உள்ள அடியில் படும் அந்த அடி 45 சாய்வில் உள்ளதால் 90 யில் பிரதிபலித்து ஒளிக்கதிர் பார்ப்பவருடைய கண்ணை வந்தடையும். இந்த டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி கடலுக்கடியில் மூழ்கியிருந்தபடியே கடலின் மேலே கப்பல் வருவதையும், குகைகளில் பதுங்கிக் கொண்டே வெளியில் வருகின்ற அபாயக்களையும் அறிந்து கொள்ள முடியும்.

*************

பாம்பு எவ்விதம் ஒடுகிறது? அதற்குக் கால் உண்டா?பாம்புக்குக் கால்கள் கிடையாது. அடிப்புறச் செதில்களாலேயே பாம்பு தரையைப் பற்றி ஒடுகிறது. செதில்கள் பின்புறமாகத் தரையில் பிடிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. எனவே பாம்பு முன்னோக்கி நகர்ந்து பின்னர் பின்னோக்கி நகரும் போது செதில்கள் தரையில் மோதிக் கொள்வதால் உந்திக் கொண்டு மறுபடியும் முன்னோக்கி நகர்ந்து, இப்படித்தொடர்ந்து செல்கிறது.

*************

பல்லி தலை கீழாகக் கூட எப்படி நடக்க முடிகிறது? பல்லியின் கால் பாதங்களில் உட்குழவு இருக்கும். தன் பாதங்களினால் முதலில் சுவர் அல்லது தரையில் பதிய வைக்கும். பிறகு பாதத்தைச் சுருக்கும்போது உட்குழிவுகளில் வெற்றிடம் உண்டாகிறது. வெற்றிடம் உண்டாவதால் அதனை நிரப்ப வெளிக்காற்று அங்கு வரும். அதனால் பாதம் பிடிப்பை விடாது. இவ்விதம் பல்லி தலை கீழாக நடக்க முடிகிறது.

*************

இரததம் உறைதல் என்றால் என்ன? உடலில் ஏதேனும் வெட்டுக்காயம் ஏற்பட்டால் அப்போது இரத்த நாளங்கள் வெட்டுபடும் போது அதனின்று இரத்தம் பீறிக் கொண்டு வெளியேறும். ஆனால் சிறிது நேரத்தில் அது தானாகவே நின்று விடும். ஏனென்றால் இரத்தத்திலுள்ள் ·பைப்ரினோஜன்' எனப்படும் நார்புரதம் வெளிக்காற்றில் பட்டவுடன் ஒர் வலை போலப் பின்னிக் கொண்டு மேற் கொண்டு இரத்தம் வெளியேறாமல் காக்கும். இதற்கு இரத்தம் உறைதல் என்று பெயர்.

*************

பயத்தினால் சிலருக்கு வாயிலும் மூக்கிலும் இரத்தம் வடிந்து இறந்து விட நோ¢டுவது எதனால்? பயத்தின் போது இதயம் மிக வேகமாகச் சுருங்கி வி¡¢கிறது. அப்போது திடீரென இரத்தம் அதிக அழுத்தத்தில் இரத்தக் குழாய்களின் மூலம் செலுத்தப்படுகிறது. அதிக அழுத்தத்துடன் இரத்தம் இவ்வாறு இரத்தக் குழாய்களின் வழியே செல்லும்போது திடீரென சில வேளைகளில் இரத்தக் குழாய் வெடித்து விடும். அதனால் இரத்தம் வெளியேறி வாய், மூக்கு வழியாக வடியும், அதனால் மனிதன் இறந்து விடக்கூடும்.

*************

வெற்றிலை போடும் பழக்கம் நல்லதா கெட்டதா? வெற்றிலை போடும் பழக்கம் ஒரு வகையில் நல்லதே. ஆனால் அதிகமாகப் போடக் கூடாது, கட்டாயமாகப் புகையிலை சேர்கக்க் கூடாது.
வெற்றிலை ஜீரணத்திற்கு தேவையான பொருள்கள் அடங்கியுள்ளன. அத்துடன் சேர்த்து நாம் உட்கொள்கிற சுண்ணாம்பில் கால்ஷியம் இருப்பதால்நம் உடலுக்குக் கால்ஷியம் சத்து கிடைக்கிறது.

*************

இறைக்க இறைக்கக் கிணற்றில் அதிகம் நீர் ஊறுவதேன்? கிணற்று நீரை இறைக்காமல் இருக்கும்போது அதிலுள்ள் நீரின் அழுத்தம் மாறாமல் நிலையாக இருக்கிறது.
ஆனால் நீரைவெளியேற்றும்போது அங்குள்ள நீரின் அழுத்தம் குறைகிறது. அப்போது கிணற்றின் சுற்றுப்புறத்தில் அதிக அழுத்தத்தில் உள்ள நீர் நுண் துளைகளின் வழியாக கிணற்றை வந்தடைந்து அழுத்தத்தை ஈடு செய்கிறது.

*************

மண் பானையில் வைக்கப்படும் நீர் குளிர்ச்சியாக இருப்பதேன்? மண்பானையில் நுண் துவாரங்கள் உள்ளன. இதன் வழியாக நீர் கசியும். கசிந்த நீர் வெளிக்காற்றின் உஷ்ணத்தால் ஆவியாகும். ஆவியாவதற்குத் தேவையான அதிகப்படி உஷ்ணத்தைப் பானையில் உள்ள நீ¡¢லிருந்தே எடுத்துக் கொள்ளும். அப்பொழுது நீ¡¢ன் வெப்ப நிலை வெளிக் காற்றின் வெப்பத்தை விடக் குறைந்து காணப்படும். அதனால் பானைத் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கிறது.

*************

ஒர் இரும்புக் குண்டை கடலில் போட்டால் மூழ்கிவிடும். அதே இரும்பு தட்டையாக, தகடாக கடலில் போடப்பட்டால் மூழ்குவதில்லை. காரணம் என்ன தெரியுமா? தண்ணீரில் போடப்படும் பொருளின் எடையை விட அது வெளியேற்றும் நீரின் எடை அதிகமாக இருந்தால் அது மிதக்கிறது. எனவே தட்டையான இரும்பு மிதக்கிறது.

*தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-3

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-3
ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும்

1) தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்?
Galileo Galilei, Italy, 1593.

2) ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஆகாய விமானத்தை கண்டுபிடித்தார்?
Wright Brothers, America, 1903.

3) துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தார்?
Macmillan, Scotland, Year ?.

4) மின்பிறப்பாக்கியை (Dynamo) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்பிறப்பாக்கியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1831.

5) டைனமைற்றை (Dynamite) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?
Alfred Nobel, Sweden, 1867.

6) ஒக்சிஜனை (Oxygen) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒக்சிஜனை கண்டுபிடித்தார்?
Joseph Priestley on 01 - August - 1774.

7) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தார்?
John Logie Baird, England, 1926. (Born in Scotland)

8) தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்தார்?
Alexander Graham Bell, 1876.

9) தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்?
Henry Mill, England, 1714.

10) பென்சிலினை (Penicillin) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பென்சிலினை கண்டுபிடித்தார்?
Allen Fleming, Scotland, 1928.

11) மின்மாற்றியை (Transformer ) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்மாற்றியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, 1831 -- William Stanley, 1885 (Modern Transformer)

12) மின்கலத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்கலத்தை கண்டுபிடித்தார்?
Anastasio Volta , Italy, 1807.

13) குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார்?
William Harvey, 1628.

14) புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார்?
Isaac Newton, England, 1687.

15) Transistor இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு Transistor இனை கண்டுபிடித்தார்?
மூன்று பௌதீகவியலாளர்களின் கூட்டு முயற்சியால் Transistor கண்டுபிடிக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரம்:- John Bardeen, Walter Brattain,William Shockley, 1947.

16) கணனியை (Automatic Calculator) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு கணனியை கண்டுபிடித்தார்?
Wilhelm Schickard , German, 1623.

17) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?
Junko Tabei, Japan, 16 - May - 1975.

18) இரசாயணவியலில் நோபல் பரிசு பெற்ற தம்பதிகள் யார்? அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? அவர்கள் எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசினை பெற்றார்கள்?
Frederic Joliot & Irene Curie, France, 1935.

19) வட துருவத்தை சென்றடைந்த முதல் மனிதன் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த ஆண்டில் வட துருவத்தை சென்றடைந்தார்?
Robert Edwin Peary, American, 06 - April - 1909.

20) துணைக்கோள்களற்ற (Moons) இரண்டு கோள்கள் எவை?
Mercury, Venus.

21) அணு குண்டை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு அணு குண்டை கண்டுபிடித்தார்?
Robert Oppenheimer, America, 1945.

22) மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின் விளக்கை கண்டுபிடித்தார்?
Thomas Alva Edison, America, 1879.

23) ஒலிபெருக்கியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒலிபெருக்கியை கண்டுபிடித்தார்?
Horace Short, Britain, 1900.

24) நுணுக்குக்காட்டியை (Microscope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு நுணுக்குக்காட்டியை கண்டுபிடித்தார்?
Janssen, Netherlands, 1590.

25) பக்ரீரியாவை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பக்ரீரியாவை கண்டுபிடித்தார்?
Leeuwenhock, Netherlands, 1683.

26) வாயு அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு வாயு அடுப்பை கண்டுபிடித்தார்?
Robert Wilhelm Bunsen, Germany, 1855.

27) இரும்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு இரும்பை கண்டுபிடித்தார்?
Henry Bessemer, England, 1856.

28) Benzene இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு Benzene இனை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1825.

29) X - ray இனை கண்டுபிடித்தவர் யார்?அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு X - ray இனை கண்டுபிடித்தார்?
Wilhelm Conrad Rontgen, German, 1895.

30) X - ray இனை கண்டுபிடித்தவருக்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது?
1901 ஆம் ஆண்டு (First Nobel Prize for Physics In History)
தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan


தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-2

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-2

இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.

* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.

* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.

* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.

* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.

* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.

* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.

* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.

* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.

*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.

*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.

*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.

*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.
அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.

*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.

*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.

*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.

*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.

தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-1

தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-1

இரு கண்களுக்கு நடுவில் நெற்றிப் பொட்டில் அவ்வப்போது விரல்களால் அழுத்துவதால் நமக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். மறந்து போன விஷயங்களை ஞாபகத்துக்கு கொண்டுவர இது உதவும். இந்த இடத்தில்தான் நினைவாற்றலுக்கான அக்குப் புள்ளிகள் உள்ளன. இதனால்தான் மறந்துபோன விஷயங்களை நினைவுக்குக் கொண்டுவர நெற்றியில் விரல் வைத்து தட்டுகிறார்கள். இது முன்னோர்கள் வழியாக நமக்கும் வந்தது.

*வலது கைப்பழக்கம் உள்ளவர் என்றால் சாப்பிடும்போது வாயின் வலது புறத்தில்தான் உணவை மென்று சுவைத்துச் சாப்பிடுவார்கள். அதே சமயம் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் சாப்பிடும்போது வாயின் இடது புறத்தை உபயோகித்து உணவை ருசிப்பது வழக்கம்.

*வெங்காயம் உரிக்கும்போது நமக்கு கண்ணீர் வரும். காரணம் அதில் உள்ள அமிலத்தன்மை. வெங்காயத்தினை உரிக்கும்போது அதில் உள்ள அமிலம் வெளிப்பட்டு காற்றில் கரைந்து உரிப்பவர் மற்றும் அருகில் இருப்பவர் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைத்து விடுகிறது. வெங்காயம் உரிக்கும்போது சூயிங்கம் மென்றால் கண்களில் இருந்து கண்ணீர் வெளிவராது.

*உங்கள் நாக்கு இளம் சிவப்பு நிறத்தில் இருந்தால் உங்கள் நாக்கு பாக்டீரியா தொல்லையில்லாமல் சுத்தமாக இருக்கிறது என்று அர்த்தம். வெண்மை நிறத்தில் இருந்தால் பாக்டீரியா பாதிப்பு உள்ளது என்று பொருள்.

*வியப்பால் அவள் விழி விரிந்தது என்று கவிஞர்கள் கவிதை புனைவார்கள். விஞ்ஞான ரீதியில் இது உண்மை. அதாவது ஒரு மனிதன் மகிழ்ச்சியான ஒன்றை அல்லது ஆச்சர்யம் தரும் ஒன்றைப் பார்க்கும்போது அவனது கருவிழி 45 விழுக்காடு விரிவடைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

*கடலில் கிடைக்கும் சங்கை எடுத்து காதில் வைத்துக் கேட்டால் அதில் இருந்து அலை ஓசை சத்தம் வருவதுபோல கேட்கும். அதனை சிலர் கடல் அலையின் ஓசை என்று நினைப்பார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. காதுகளில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் பாய்ந்து செல்லும் சத்தம்தான் சங்கில் எதிரொலித்து நமக்கு கடலலை ஓசையாகக் கேட்கிறது.

*கேரள மாநிலம் நீலாம்பூர் என்னும் காடுகளில் ஆதிவாசி மக்களின் சில பிரிவினரில் வினோதமான பழக்கம் நிலவுகிறது. இவர்கள் பிறக்கும் குழந்தை களுக்கு உடனடியாக பெயர் வைத்துவிடுவதில்லை. 15 வருடங்கள் ஆன பிறகே பெயர் சூட்டுகிறார்கள். அதுவரை தங்களது குழந்தைகளை மோளே (மகள்), மோனே (மகன்) என்று மலையாளத்தில் அழைக்கி றார்கள். 15 வயதாகும்போது அந்தக் குழந்தையின் தந்தையின் கனவில் கடவுள் தோன்றி `இந்தப் பெயரை உன் குழந்தைக்கு வை' என்று சொல்வாராம். அதன் பிறகே பெயர் சூட்டும் படலம் நடக்கும்.

*ஆயிரக்கணக்கான சிட்டுக்குருவிகளை அறிவியல் ரீதியில் ஆராய்ச்சி செய்ததில் அவைகள் அனைத்தும் கசக்கும் சுபாவமுடைய வேப்பமரத்து இலை-குச்சிகளால் நேர்த்தியாக கட்டியிருப்பது கண்டறியப்பட்டது. மகத்தான மருத்துவ குணம் கொண்ட வேப்பிலையின் கசப்பான நெடிக்கு முட்டைகளையோ, குஞ்சுகளையோ வைரஸ் கிருமிகள் நெருங்குவது கிடையாது. ஆகவேதான் சிட்டுக்குருவிகள் வேப்பிலையால் கூடுகளை கட்டுகின்றன.

*நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்புடைய தவளைகள் தமது கண்களால் கேட்கவும் செய்கின்றன. தவளைகளின் கண்களே காதுகளாகவும் இயங்குகிறது. தவளைகளுக்கு அதனுடைய கண்களுக்குப் பின்புறம் மூளையிலிருந்து வரும் நுண்ணிய நரம்பு அமைந்துள்ளது. அதன் காதுகளின் பணியிணைச்செய்கிறது.

*கொடிய விஷத்தைக் கொண்ட தேள்கள் சேர்ந்தாற்போல் ஆறு மாதம் கூட உணவு உண்ணாமலே வாழக் கூடிய வல்லமை பெற்றது. விலங்கியல் ஆராய்ச்சியின் போது ஒரு தேள் 420 நாட்கள் எந்த வித ஆகாரமும் இல்லாமல் வாழ்ந்து சாதனை புரிந்தது.

*கண்கவர் நீலகிரி மலைக் காடுகளில் ஒரு வகை பச்சோந்தி வாழ்கிறது. இதனுடைய உடல் நீளம் 5 செ.மீட்டர் தான். இதில் ஒரு வியப்பான செய்தி என்னவென்றால், இதன் நாக்கின் நீளம் 1.25 மீட்டர். இதன் நாக்கு எப்போதும் சுருட்டிய நிலையிலேயே இருக்கும். இது ஒரு மரக்கிளையில் ஒய்யாரமாக உட்கார்ந்தபடியே தனது நீண்ட நாக்கினை நீட்டி மற்ற கிளைகளில் உள்ள புழு, பூச்சிகளை அதில் ஒட்ட வைத்து தின்றுவிடும்

*முதன் முதலில் நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை உருவாக்கியவர் வில்லியம் போர்னே என்னும் இங்கிலாந்துக்காரர். இவர், 1578-ம் ஆண்டு நீர்மூழ்கி கப்பலுக்கான வரைபடத்தை வரைந்தார். எனினும் கார்னிலியூஸ் வான் டிரெப்பல் என்னும் நெதர்லாந்து நாட்டுக் காரர் 1620-ம் ஆண்டு முறையான நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தவர். நீரில் மூழ்கக் கூடிய ஒரு படகைத் தயாரித்த அவர் அதில் பிராண வாயு கிடைப்பதற்காக நீண்ட குழாயை இணைத்திருந்தார். நீருக்குள் மூழ்கியிருப்பவர் துடுப்பு மூலம் படகை இயக்கவேண்டும். 12 படகோட்டிகளுடன் தான் வடிவமைத்த நீர்மூழ்கிக் கப்பலை அவர் லண்டன் தேம்ஸ் நதியில் இயக்கிக் காட்டினார். 3 மணி நேரம் இந்தக் கப்பல் நீருக்கடியில் இருந்தது.


*ராணுவத்திற்கான நீர்மூழ்கிக் கப்பலை 1776-ம் ஆண்டு டேவிட் புஷ்னல் என்னும் அமெரிக்கர் வடிவமைத்தார். எனினும் சகல வசதிகளுடனும் கூடிய முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஜான் பி.ஹாலண்ட் மற்றும் சைமன் லேக் என்னும் இருவர் 1890-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தயாரித்தனர். ஜானின் நீர்மூழ்கிக் கப்பலின் டிசைனை அமெரிக்காவும் சைமன் லேக்கின் வடிவமைத்ததை ரஷியா-ஜப்பான் நாடுகளும் ஏற்றுக்கொண்டு தயாரிக்க ஆரம்பித்தன.

*ஒரு மனிதன் தினமும் சராசரியாக ஒரு மணி நேரம் 6 நிமிடங்களை பயணத்தில் கழிக்கிறான். வருடத்திற்கு ஒவ்வொருவரும் சராசரியாக 12 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்கிறார்கள்.உலக அளவில் 53 சதவீதம் பேர் கார்களிலும், 26 சதவீதம் பேர் பஸ்சிலும், 9 சதவீதம் பேர் ரெயிலிலும் இன்னொரு 9 சதவீதம் பேர் விமானங்களிலும் பயணிக்கிறார்கள். சைக்கிள் பயணம் வெறும் 3 சதவீதம்தான். 2050-ம் ஆண்டு அதிகவேக வாகனங்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகி விடும் என்பதால், அப்போது ஒரு நாளில் ஒருவர் பயணம் செய்யும் நேரம் 12 நிமிடங்களாகக் குறைந்து விடுமாம். அப்போது கார்களில் பயணம் செய்வோர் 35 சதவீதம் பேரும், பஸ்சில் 20 சதவீதம் பேரும் அதிகவேக வாகனங்களில் 41 சதவீதம் பேரும் ரெயிலில் 4 சதவீதம் பேரும் பயணம் செய்வார்கள் என்று மதிப்பிட்டிருக்கிறார்கள࠯?.

*உலகின் முதல் போக்குவரத்து சிக்னல் 1890-ம் ஆண்டு லண்டன் நகரில் பயன் படுத்தப் பட்டது. இதில் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் அப்போது பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் லண்டனில் எதுவும் கிடையாது. குதிரைகள் இழுத்துச் செல்லும் பஸ்கள் மட்டுமே இயங்கின. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு இறுதி வாக்கில் தான் கார்கள் அறிமுகமாயின. முதல் தானியங்கி போக்குவரத்து சிக்னல் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லாண்ட் நகரில் 1920-ம் ஆண்டு பொருத்தப்பட்டது.

*வங்கி முறையிலான கடன் கொடுக்கும் பழக்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது. பணக் கடன் வழங்கியது, கடனை அடைத்தது போன்றதற்கான ஆதார ரசீதுகள் 14-ம் நூற்றாண்டில் ஏற்பட்டதாகும். காகிதப் பணம் கடன் தருவது 17-ம் நூற்றாண்டில் வேகமாக பரவியது. தானியங்கி பணம் பட்டுவாடா செய்யும் எந்திரங்களில் பணம் எடுப்பதற்கு அட்டை வழங்குவது நமது நாட்டில் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வேகமாக வளர்ச்சி கண்டது. எனினும் அமெரிக்காவில் 1951-ம் ஆண்டிலேயே பணம் எடுக்கும் அட்டைகள் புழக்கத்திற்கு வந்து விட்டன. டைனர்ஸ் கிளப் தனது உணவக வாடிக்கையாளர்கள் 200 பேருக்கு நிïயார்க் நகரில் உள்ள தங்களின் 27 உணவகங்களில் எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளும் கிரடிட் கார்டுகளை வழங்கியது. காந்த பட்டைகளுடன் கூடிய கிரடிட் கார்டு 1970-ம் ஆண்டு புழக்கத்திற்கு வந்தது.

*வாலாட்டிக் குருவி எப்போதும் ஏன் வாலை ஆட்டிக் கொண்டே இருக்கிறது தெரியுமா?...

அது சுவாச உறுப்பாக பெற்றிருப்பது வாலைத்தான். எனவேதான் சுவாசிப்பதற்காக தனது வாலை இடைவிடாது ஆட்டிக் கொண்டே இருக்கிறது
தொடரும்...

முழு அளவு படத்தைப் பார்
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan